திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் நாட்டின் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்ததற்கான 301 பேருக்கு சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டு முதல்வரின் குடியரசு தின காவலர் பதக்கங்களை 119 பேருக்கு அணிவித்தார். 21 பயனாளிகள் 7 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்கான நற்சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் சரவணன் வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments