2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக தயாராகிறது – பதவிக்காலாளர் நல வாரியம், ஓபிசி நலத் திட்டங்கள் குறித்து விளக்கம் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் தலைமையில், திமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
திமுக அரசு அமைந்த பிறகு பத்திரிகையாளர் நல வாரியம் 2021இல் பேரவையில் அறிவிக்கப்பட்டு 2022இல் பத்திரிகையாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது. இதில் தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இன்னும் 4 ஆயிரம் பேர் சேருதவற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்வி உதவித் தொகை உள்பட 7 வகையான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நல வாரியத்தில் வழங்கப்படும் அனைத்து வகையான உதவித் தொகைகளையும் இப்போதுள்ள பொருளாதாரக் காலச் சூழலுக்கு ஏற்ப இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். விபத்து மரணத்துக்கான நிதி என்ற வகைப்பாட்டையும் உருவாக்கிட வேண்டும்.
உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும்.
உறுப்பினர்களுக்கு ஊடகத் தொழில்சார்ந்த உபகரணங்களான மடிக்கணினி போட்டோ கேமரா வீடியோ கேமரா போன்றவற்றை தரமானதாகவும், குறைந்த விலையிலும் வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு உதவிடும் வகையில் குடும்ப நலநிதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விரு திட்டங்களிலும், திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு தொகை கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில், இவற்றில் அச்சு ஊடகத்தினர் மட்டுமே பயன்பெற முடிகிறது. தொலைக்காட்சி ஊடகத்தினரும் பயன்பெறும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
பத்திரிகையாளர் நல நிதியம்
கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நல நிதியம் உருவாக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து பத்திரிகையாளர்களின் மருத்துவச் செலவுகள்
அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட உயர் சிகிச்சைச் செலவுகளுக்கான நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களுக்கு பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இந்த நிதியத்தைப் பலப்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
கூடுதலாக ரூ. 5 கோடியை ஒதுக்கி, வலுப்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் பயன்பெறும் வகையில், பத்திரிகையாளர் நல வாரியத்துடன் இணைத்து உறுப்பினர்களின் மருத்துவச் செலவுகளுக்கான நிதியாக வழங்கிடும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு ரேசன் பொருட்கள்
காவல்துறையினருக்கு வழங்குவது போல் கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள், சிந்தாமணி, அமராவதி போன்ற அங்காடிகளில் கூடுதல் கழிவு விலையில் கிடைப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மருந்து நிலையங்களில் கூடுதல் சலுகை விலையில் அவசர கால மருந்து உதவிகள் கிடைப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு விபத்து சிகிச்சை அதற்கான மருந்து அவசர கால நிதியாக ரூ.5 இலட்சம் உதவியாக கிடைப்பதற்கு
ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட மேற்கண்ட கோரிக்கைகளை திமுகவின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கவும், உரிய காலத்தில் நிறைவேற்றித் தரவும் திருச்சி டிஸ்ட்ரிக் பிரஸ் & மீடியா கிளப் கேட்டுக் கொள்கிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments