திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் புதிதாக ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா நாளை 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திறப்பு விழாவிற்காக கட்டிடத்தில் மின்விளக்கு அலங்காரப் பணிகள் நேற்று நடைபெற்றபோது முசிறி அருகே உள்ள பைத்தம்பாறை கிராமத்தை சேர்ந்த ஐ.டி.ஐ இரண்டாம் ஆண்டு படித்து வரும் கருணா (20) புதிய கட்டிடத்தின் மாடியில் நின்று மின்விளக்குகளை பொருத்தி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், நிலைதடுமாறி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் வழக்குப்பதிந்து கருணாகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த மாணவர் கர்ணாவின் உறவினர்கள் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி கேட்டு முசிறி கைகாட்டியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல்அறிந்த முசிறி இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக திருச்சி – நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments