இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் திருச்சி CJM நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, வெளியே செல்லும் போது அவரது ஆதரவாளர்கள் அவரை செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். நீதிமன்ற வளாகத்தில் வீடியோ எடுக்கக் கூடாது, பேட்டி எடுக்கக் கூடாது என அங்கிருந்து வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு வேண்டும். தன்னிடம் வாக்குவாதம் செய்த வழக்குறைஞர்களை கைது செய்ய வேண்டுமென,
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி நசீர் அலி என்பவரிடம் அர்ஜுன்சம்பத் வாய்மொழியாக புகார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தந்தை பெரியார் சிலையை உடைத்த வழக்கு 2006 ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது போடப்பட்டது.
அது பொய் வழக்கு, இந்து திருக்கோவிலுக்கு முன்பு மதத்தை புண்படுத்துகின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளோ சிலைகளோ 100 மீட்டர் தொலைவில் தான் இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அப்படி இருக்கையில், பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகே இந்துக்கள் மனதை புண்படும் வகையில் எழுத்துக்கள் அடங்கிய பெரியார் சிலையை வைத்துள்ளார்கள்.
அதை அகற்றுவதற்கு சட்டரீதியாக இந்து மக்கள் கட்சி சட்ட ரீதியாக போராடி அகற்றுமே தவிர, தவறான நோக்கத் தில் எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம்.
ஆன்மீக பக்தி கொண்ட எட்டு நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து அவசர அவசரமாக பெரியார் சிலை திறந்தார்கள். சிலை சேதப்படுத்திய தற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்று வழக்கின் விசாரணைக்காக ஆஜரானோம். அன்று 29.1.2026 தேதி மாற்றி வைத்தார்கள் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கடந்த வாய்தாவின் போது பேட்டியளித்து சென்றார்.
இந்நிலையில் இன்று வழக்கறிஞர்களுக்கும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கும் நீதிமன்ற வளாகத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments