திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் தனியார் கல்லூரியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

ஏழை எளிய பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை பெறுவதற்கும் ஏதுவாக தமிழக முதல்வர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் நலம் தாக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நடத்த அறிவுறுத்தி உள்ளார் அதன்படி நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விதமான மருத்துவர்களை கொண்டு பொதுமக்களுக்கு தேவையான மருத்துவர் பரிசோதனை ஆலோசனை மற்றும் மேற்சிகிச்சைக்கான பரிந்துரைகளும் செய்யப்படுகின்றனர்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அருகே குண்டூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடந்த மருத்துவ முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் பொது மருத்துவம் காது மூக்கு தொண்டை இதயவியல் கண், பல், மனநலம், உள்ளிட்ட 17 வகையான மருத்துவர் துறையைசேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவஆலோசனை பரிசோதனை மற்றும் வேர் சிகிச்சைக்கான அறிவுரைகளை வழங்கினர்.

இந்த நிலையில் முன்னதாக முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு கால பெட்டக 11 பேருக்கும், மருத்துவ காப்பீடு திட்ட அட்டைஇரண்டு பயனாளிகளுக்கும், தொழு நோயாளி பாதுகாப்பு பெட்டகம் ஒருவருக்கு வழங்கப்பட்டது.

இந்த முகாமில் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தகுமார், அண்ணாதுரை, தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன்,உன்னால் பாலமுருகன், கயல்விழி, கல்லூரி துணைத் தலைவர் அப்தூல் சலீல், கல்லூரி முதல்வர் குளோரி வயலட், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதானந்தம், சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், குமார்,கோபாலகிருஷ்ணன் பலரும் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments