கடந்த 02.08.2024-ந்தேதி இரவு 1900 மணிக்கு ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீதாபுரம் காவேரி படித்துறை அருகில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவேரி ஆற்றின் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வந்த புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை சேர்ந்த கல்லூரி மாணவரை, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடிகளான 1.விஜய் 25/26, த.பெ.பழனிவேல், 2.சுலுக்கி சுரேஷ் (எ) சுரேஷ் 27/26 த.பெ.மாணிக்கம். 3.நவீன்குமார் 25/26, த.பெ.ராமு மற்றும் மூன்று இளஞ்சிறார்கள் வெளியூர் காரனுக்கு இங்கு என்ன வேலை என்று வீண் தகராறு செய்து கட்டையால் தாக்கி கொலை செய்ததாக பெறப்பட்ட தகவலின்பேரில் எதிரிகள் 1.விஜய், 2.சுலுக்கி சுரேஷ்(எ) சுரேஷ், 3.நவீன்குமார் ஆகியோர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இளஞ்சிறார்கள் மூவர் இளைஞர் நீதி குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள்.

இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, மேற்படி எதிரிகள் 1.விஜய், 2.சுலுக்கி சுரேஷ்(எ) சுரேஷ், 3.நவீன்குமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேலும் மூன்று இளஞ்சிறார்கள் மீது இளைஞர் நீதிகுழுமத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மூன்று எதிரிகள் மீது பதியபட்ட வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி, திருச்சி அவர்களால் இன்று 29.01.2026-ந்தேதி மேற்படி வழக்கின் எதிரிகளான 1.விஜய், 2.சுலுக்கி சுரேஷ்(எ) சுரேஷ், 3.நவீன்குமார் ஆகியோருக்கு பா.நி.ச.பிரிவு 103(2)-ன்படி தலா ஆயுள் சிறைதண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments