திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிகள் 99 சதவீதம் முடிவடைந்து விட்டன. ரூபாய் 350 கோடியில் ஏற்கனவே 8500 அடி நீளம் உள்ள ஓடுதள பாதையை 12,500 அடியாக நீட்டிப்பதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது.
நிலம் கையகப்படுத்தும் பணிகள் இரண்டு ஏக்கர் மட்டுமே மீதம் உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் கொரியர் டெர்மினல் உள்ளிட்டவைகளை

இயக்குவதற்கு கூடுதலாக மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் 700 வீரர்கள் தேவைப்படுகிறார்கள் அதற்கு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.திருச்சி பொன்மலை ஜி கார்னர் பாலம் ரயில்வே நிலம் கொடுக்க நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது விரைவில் அதற்கான பணிகள் துவங்கும். திருச்சி மாரிஸ் ஜங்ஷன் பாலம் வருகிற ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments