Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நாளை (பிப்.11) கே.கே. நகர், கே.சாத்தனூர் பகுதிகளில் மின்தடை.

திருச்சி கே.சாத்தனூர் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, நாளை பிப்ரவரி 11, 2026 (புதன்கிழமை) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 05:00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

கே.கே. நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்ப நகர், எல்.ஐ.சி காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமலைப்பட்டி, மன்னார்புரம் (ஒரு பகுதி), சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், ஆர்.வி.எஸ் நகர், வயர்லெஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே. நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜா நகர், ஆர்.எஸ் புரம், டி.எஸ்.என் அவென்யூ, குளவாய்ப்பட்டி, ராயல் வில்லா, ஈ.பி காலனி, முத்து நகர், ராணி மெய்யம்மை நகர், மோராய் சிட்டி, எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி பகுதி, பசுமை நகர், அந்தோணியார் கோவில் தெரு, வி.எம்.டி ரோடு, கலைஞர் நகர், இந்திரா நகர், மோராய் கார்டன், அம்மன் நகர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் கொட்டப்பட்டு .
பொதுமக்கள் இந்த மின் தடையைக்

கருத்தில் கொண்டு, தங்களின் அன்றாடப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *