திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
ஆணையர் திரு. லி. மதுபாலன், இ.ஆ.ப., அவர்களது செய்தி வெளியீடு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு குழு அலுவலகம் எண்.5, வார்டு எண்.28 அண்ணாநகர், உழவர் சந்தை நீர்தேக்கத் தொட்டி வளாக பகுதியில் மாநில நிதிக்குழு ஊக்க நிதி மற்றும் மாநகராட்சி பொதுநிதியின் கீழ், உடற்பயிற்சி மையம, உள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகளுக்கான மையம் கட்டும் பணி ரூ.551.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிவுறும் நிலையில் உள்ளது.

விரைவில் திறப்பு விழா காண உள்ளது.
இவ்விளையாட்டு மையத்தில் டென்னிஸ், இறகு பந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ள பகுதியில் நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டதால், மேற்படி TS No.16/1 மற்றும் TS No. 19/1ல் அன்றைய தேதியில் இருந்த கட்டுமானங்கள் மற்றும் அந்தப்பகுதி நீங்கலாக மீதமுள்ள குளிரூட்டப்பட்ட கட்டிடத்திற்குள் டேபிள் டென்னிஸ், பில்லியார்ட்ஸ் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சி மையம் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளது. மேலும், இவ்விளையாட்டு மையத்தில் உணவகத்துடன் கூடிய தங்கும் அறை வசதிகளும் அமைந்துள்ளது.

இவ்விளையாட்டு மையத்தில் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேற்கண்ட விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் ஆயுட்கால உறுப்பினராவதற்கு வைப்புத் தொகையாக ரூ.2.00 லட்சம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து கொள்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் ஆண்டு பராமரிப்புத் தொகையாக ரூ.15,000/- செலுத்த வேண்டும். வருடாந்திர உறுப்பினர்கள் மற்றும் மாதாந்திர உறுப்பினர்கள் தனித்தனியே கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

மேலும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் உரிய கட்டணத் தொகையினை தனித்தனியாக செலுத்தி விளையாடலாம்.
இவ்விளையாட்டு மையத்தில் உறுப்பினராக சேர விரும்புவோர் மண்டல அலுவலகம் எண்.5 உதவி ஆணையர் அவர்களை தொடர்பு கொண்டு நேரிலோ அல்லது கணினி வலைத் தளம் https://www.trichycorporation.gov.inல் காணும் QR code (or) Link வாயிலாகவோ விண்ணப்பிக்குமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments