Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ரயில்வே துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார் – திருச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
அதில்,ஒன்றிய ரெயில்வே துறை வெளியிட்ட செய்தியே தராமல் புதிய செய்தியை ரெயில்வே அமைச்சர்தருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் 2500.61 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களுக்கு நில எடுப்பு செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 931.52 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கப்படவில்லை.

19 ரயில்வே திட்டங்களுக்கு 273 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களில் 1198 ஹெக்டேர் பரப்புள்ள் நிலங்கள் நில எடுப்பு பணிகள் முடிவடைந்து ரெயில்வே துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மதுரை – அருப்புக்கோட்டை ரெயில் பணிகள் தமிழ்நாடு அரசு நிறுத்த கூறியதாக உண்மைக்கு மாறான செய்திகழை ரெயில்வே அமைச்சர் கூறுகிறார்.

நிதியை ஒதுக்காமல் வார்த்தைகளை மட்டும் செலவிடும் பிரதமர் போலவே ரெயில்வே அமைச்சரும் உள்ளார்.

ரயில்வே திட்டங்களுக்கு அறிவிப்பு வழங்கிவிட்டு நிலம் கையகப்படுத்த உரிய நிதியை ஒதுக்க வேண்டும் ஆனால் ஒன்றிய அரசு அறிவிப்பு மட்டும் வெளியிடுகிறார்கள் நிதி ஒதுவதில்லை.

ஒன்றிய அமைச்சர் கூறும் செய்திகள் அரசியல் நோக்கம் கொண்டதாகவே உள்ளது
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்றிய அரசு பாராமுகமாக செயல்படுகிறார்கள்
ஒன்றிய நிதி நிலைக்கு அதிக பங்களிப்பு செய்வது தமிழ்நாடு அரசின் நிதி நிலை தான்.
முதலமைச்சரின் கேள்விகளுக்கு ரெயில்வே அமைச்சர் முழுமையாக பதில் கூற வேண்டும் ஏதாவது தடங்கல் இருந்தால் அதையும் முதலமைச்சர் சரி செய்து வருகிறார்.
தமிழ்நாட்டின் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்தி விட்டு ஆதாராத்தோடு பதில் அளிக்க வேண்டும்.

டபுள் இன்ஜின் இருக்கக்கூடிய உத்திரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நிலை அனைவருக்கும் தெரியும். டபுள் இன்ஜின் இருக்கக்கூடிய மாநிலங்களில் பொருளாதார நிலையையும் தமிழ்நாட்டின் பொருளாதார நிலையையும் ஒப்பிட்டு பார்த்தால் டபுள் இன்ஜின் என்பது ஏமாற்று வேலை என்பது தெரியும்.

ஒன்றிய அரசோடு இணக்கமாக செயல்பட்டால் தான் நிதி ஒதுக்கப்படும் என கூறுவது தான் பாசிசம். ஒரே நாடு ஒரே கட்சி என்கிற நிலைக்கு செல்வதற்கு தான் நிதியை ஒதுக்காமல் ஒன்றிய அரசு மிரட்டுகிறார்கள். அந்த மிரட்டல்களைளயும் தாண்டி பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆனால் ரயில்வே துறை முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது அதற்கான நிதியை முழுமையாக அவர்கள் தான் ஒதுக்க வேண்டும்.

அந்த அந்த மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கை. ஆனால் வரியை மட்டும் பெற்றுக்கொண்டு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் இருக்கிறார்கள். அதை போராடி பெற வேண்டிய சூழலில் தான் நாம் இருக்கிறோம். போராடியதால் தான் சுதந்திரமே கிடைத்தது ஏற்கனவே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளோம். நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம்.

தமிழ்நாட்டிற்கு தேவையானவற்றை கேட்டு பெற முதலமைச்சரே நேரில் பிரதமரை சென்று சந்தித்துள்ளார்கள் அப்பொழுதும் அவர்கள் நாம் கேட்கும் நிதியை ஒதுக்குவதில்லை தினமும் அவர்களிடம் கையேந்தி நிற்க முடியாது.

நிர்வாக திறமையின்மையால் தான் தமிழ்நாடு அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பதாக எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அவர் ஆட்சியில் தான் நீட் கொண்டுவரப்பட்டது, உதய்மின் திட்டம் கொண்டுவரப்பட்டது மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடமானம் வைத்தார் ஆனால் சிறந்த நிர்வாக திறமை இருப்பதால் தான் நிதி நெருக்கடிகள் இருந்த போதும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். நம்முடைய மாநிலத்திற்கும் வளர்ச்சிக்கு என்ன தேவையோ அதனை முதலமைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி தான் வருகிறார்.

ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 12ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது அன்றைய தினம் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *