திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பாலக்கரையிலுள்ள மாநகராட்சி கோட்ட அலுவலகம் 2ல் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியிடம் தாக்கல் செய்தார்.அவருடன் வேட்புமனுதாக்கலின் போது அமைச்சர் மகேஸ்,எம்.பி துரை வைகோ உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இனிகோ இருதயராஜ்
தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தையும் கிழக்கு தொகுதிக்கு கொண்டு சேர்த்துள்ளேன் அது பயனாளர்களுக்கு தெரியும் பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும் அதிமுக பேசும் கருத்துக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படவில்லை மக்கள் நலத்திட்டங்களை தொகுதிக்கு செய்துள்ளேன். காந்தி சந்தைய இடம் மாற்றக் கூடாது என்பதை சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துவிட்டார் நகராட்சி துறை அமைச்சர் அவர்களும் காந்தி மார்க்கெட் மாற்றப்படாது என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தற்பொழுது ஜோசப் விஜய் என குறிப்பிடுகிறார் என்ற கேள்வியை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜிடம் கேட்டபொழுது
நான் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நிற்கிறேன்.சிறு வயதிலிருந்து மதக்கட்டுப்பாட்டுகளுக்கு இருந்து கிறிஸ்தவராக இருக்கிறேன். தற்பொழுது பொதுவானவனாக இருந்து அனைவரும் அரவணைத்து செல்கிறேன். மக்களௌ முடிவு செய்வார்கள் நான் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என உறுதி என்று சொல்கிறேன்.

அதிமுக வேட்பாளர் விமர்சனத்திற்கு அவரை கண் அறுவை சிகிச்சை செய்ய செய்ய சொல்லுங்கள் என பதில் அளித்துவிட்டு சென்றார்.*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*



Comments