Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

இந்து தமிழ் திசை, கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் “உனக்குள் ஓர் ஐஏஎஸ்” வழிகாட்டு நிகழ்ச்சி

 

‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழி காட்டு நிகழ்ச்சி திருச்சியில் ஏப். 12-ம் தேதி
நடைபெறுகிறது.

‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி அரங்கில் ஏப்.12-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப் படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டு கள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கிநிற்பவர் களே அதிகம். அவ்வாறான தயக்கத்தைப்போக்கி,யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், இந்திய அரசின் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் த.ஜெய சீலன் ஐடிஏஎஸ், சிறப்பு விருந்தி னராகப் பங்கேற்று ஆலோ சனைகளை வழங்கவுள்ளார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற் றும் மேலாண்மை இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர்ஊக்கவுரையாற்ற இருக்கிறார்கள்.

காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் ஒரு மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும். அனைத்து தேர்வு மாதிரி வினாத் தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு இலவச பயிற்சி கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் இத்துடன் உள்ள லிங்க் கிளிக் செய்து https://kingmakersiasacademy.com/unakkul-ore-ias/?utm_source=kma&utm_medium=insta&utm_campaign=uoias_2026, பதிவு செய்துகொள்ளவும். கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள 9444227273 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *