Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நியோமேக்ஸ் ரூ.8,000 கோடி மோசடி: திருச்சி கிளை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை!

மதுரையை தலைமையிடமாகக் கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக்கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் முதலீடு பெற்றதுடன், அதன் முதிர்வு தொகையை செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுமுதல் அந்நிறுவனம் மற்றும் நிர்வாகிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் மற்றும் விசாரணையில் 8000 கோடி மோசடி நடைபெற்றது தெரியவந்தது.

இதனிடையே இந்த நியோமேக்ஸ் நிறுவன மோசடியில் பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில், திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த பெல் நிறுவன ஊழியரான ரமேஷ் மற்றும் அவரது மனைவி சுகன்யா இருவரும் திருச்சியில் நியோமேக்ஸ் கிளையை நிறுவி பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளதாகவும், அவர்களிடமிருந்து பணத்தை மீட்டுத் தரகோரி பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தனர்

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் திருவெறும்பூர் கள்ளர் தெருவை சேர்ந்த நித்தியானந்தம் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… பெல் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வரும் ரமேஷ் மற்றும் அவரது மனைவி சுகன்யா இருவரும் 2014 ஆம் ஆண்டு முதல் திரு ஒரு பிரகாஷ் நகரில் நியோமேக்ஸ் கிளையை நடத்திவந்தனர் என்றும், பாதிக்கப்பட்ட நித்தியானந்தம் மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே 8000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாகவும், இது பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து புகார் அளித்து வந்தாலும் தற்போதுவரை அவர்களது பெயரில் ஒரு வழக்குகூட பதிவு செய்யவில்லை எனவும் காவல்துறையினரின் துணையுடன் அவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடிவருகின்றனர் எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்

40 கோடிக்கு மேல் நிலங்கள் வைத்திருப்பதாகவும் அதை தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை புதிதாக பொறுப்பேற்ற முதல் விஜய் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார்

தமிழகம் முழுவதும் நீயோமேக்ஸ் நிறுவனத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்து ஒவ்வொருவரும் 10 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்துள்ளதால் பல்லாயிரக்கணக்கான கோடி பணம் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், மற்ற கிளைகளைச் சேர்ந்த 75 சதவீதம்பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் திருச்சியை சேர்ந்தவர்கள் மீது இதுவரையிலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை

வேலுக்கு மேற்பட்ட கார்கள் வைத்திருந்த ரமேஷ் சுகன்யா மீது புகார் அளித்திருந்த நிலையில் ஒவ்வொன்றாக விற்றுவருகிறார் என்றும், எங்களது பணத்தை கொண்டு அவர் ரியல் எஸ்டேட் செய்து ஜாலியாக இருக்கிறார் ஆனால் பணத்தை முதலீடு செய்த நாங்களோ தெருவில் நிற்கிறோம், எனவே புதிய அரசாவது எங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்

பெல் நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 6000 பேர் ரமேஷ் மற்றும் சுகன்யாவின் நியோமேக்ஸ் கிளையில் முதலீடு செய்துள்ளதாகவும், ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை பெல் வட்டாரத்தில் மோசடி செய்துள்ளார் என்றும், அடுத்து ஒவ்வொருவராக புகார் அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்

இந்த செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம், அதேநேரம் பொதுமக்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை மற்றும் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எங்களைப் போல இருக்கும் பணத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கவேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *