Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பூச்சிக்கொல்லி அருந்திய பெண் 35 நாள் ICU-வில் போராடி மீட்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் மூன்றாவது முறையாக கர்பமானார். குடும்ப சண்டையில் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி கடந்த 31 மார்ச் அன்று துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஷத்தின் வீரியம் அதிகமாக உள்ளதால்  திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்மணி மூச்சத்திணறல் மற்றும் நினைவாற்றலில் மந்த நிலை ஏற்பட்டதால் அவருக்கு செயற்கை சுவாசம்

அளிக்கப்பட்டது. நோயாளியின் உடல்நிலை மோசமான நிலையில் அவர் 28 வார பெண் குழந்தையை இறந்த நிலையில் பிரசவித்தார். பூச்சிக்கொல்லி விஷத்தின் பக்கவிளைவான இன்டர்மீடியேட் சிண்ட்ரோம் என்னும் நிலைக்கு சென்ற அந்த நோயாளிக்கு தொடர் செயற்கை சுவாசம் அளிப்பதற்காக பர்க்யூஸ்டால் என்னும் சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு நுரையீரலில் கடும் கிருமி தொற்று மற்றும் தாது சத்து குறைபாடு ஏற்பட்ட நிலையில் அவரை செயற்கை

 

 

சுவாசத்திலிருந்து வெளிக்கொணர்ந்து வர மிகவும் சிரமாக இருந்தது. அதற்காக அவருக்கு உயர் ஆண்டிபயாடிக் மருந்துகள் உடனுக்குடன் கொடுத்ததால் அவரது கிருமி தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அவரது நுரையீரலின் செயல் திறன் அதிகரிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் செயற்கை சுவாசக் கருவி உதவியின்றி தானாக சுவாசிக்கும் நிலைக்கு அவர் உடல்நிலை சீரானது. மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோரின் மேற்பார்வையில் தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தக்க நேரத்தில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்தனர். பொது மருத்துவம் மற்றும் அறை சார்ந்த மருத்துவ சுப்ஸ்பெஷாலிட்டி நிபுணர்களின் அயரா உழைப்பினாலும் தீவிர சிகிச்சை காணாமல் 35 நாட்கள் ICU சிகிச்சையிலிருந்து வீடு திரும்பினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *