Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கிய அன்பில் மகேஷ்

திருச்சியைச் சேர்ந்த ‘மனிதம் சமூகப்பணி மையம் மற்றும் அறக்கட்டளை’ சார்பில், செம்பட்டு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பள்ளி மாணவச் செல்வங்களுக்குப் புத்தகப்பை (School Bag), பென்சில் பாக்ஸ், மதிய உணவுப் பை (Lunch Bag) ஆகியவை அடங்கிய கல்வி உபகரணத் தொகுப்பினை வழங்கினார். மேலும், வரும் கல்வியாண்டில் மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படித்துச் சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் எனத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இக்கல்வி உதவி வழங்கும் விழாவில் மனிதம் அறக்கட்டளையின் நிறுவனர் தினேஷ், பகுதி கழகச் செயலாளர் மணிவேல் மற்றும் கழக நிர்வாகிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *