வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் முதல் முறையாக மாலத்தீவில் இருந்து வந்த வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 146 பயணிகளுடன் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்தது.

இந்த விமானத்தை வரவேற்கும் விதமாக திருச்சி விமான நிலையம் சார்பாக 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக முதல்முறையாக வந்த பாரத் திட்டத்தின் கீழ் இருந்து 146 பயணிகள் திருச்சி வருகை தந்தது குறிப்பிடத்தக்கது வருகை புரிந்த பயணிகளை விமான நிலைய ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

முன்னதாக 6.1 டன் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுடன் விமானம் மாலத்தீவு சென்றது. பின்னர் 146 பயணிகளுடன் மாலத்தீவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தது. குறுகிய காலத்தில் இந்த விமான சேவை அறிவிக்கப்பட்டிருந்தாலும், பயணிகள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து திருச்சியிலிருந்து மாலத்தீவுக்கு மாலத்தீவில் இருந்து திருச்சிக்கு தொடர்ந்து விமான சேவையை அளிக்க வேண்டும் என்பது டெல்டா பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

திருச்சி விமான நிலையம் தொடங்கப்பட்ட 100 ஆண்டுகால வரலாற்றிலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது சேவையை தொடங்கிய 16 ஆண்டு கால வரலாற்றிலும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW







Comments