Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ரத்தத்தில் உள்ள மெத்தைல் கிளையாக்சால் அளவை கண்டறிய புதிய கருவி சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் திட்டம்

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ரத்தத்தில் உள்ள “மெத்தைல்கிளையாக்சால்” அளவை நிர்ணயம் செய்யக்கூடிய ஒரு புதிய கருவியை கண்டுபிடிக்க உள்ளது. பல்கலைக்கழகம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ள மின்வேதியல் பயோ சென்சாரின் உதவியுடன் இக்கருவி உருவாக்கப்பட உள்ளது. 

சாஸ்திராவின் நானோ டெக்னாலஜி மற்றும் உயர் பயோமெட்டீரியல் மையம் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பயோடெக்னாலஜி துறை ஆகியவை இணைந்து 2014ல் பயோமார்க்கர் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த பயோமார்க்கர் சர்க்கரை வியாதி எவ்வாறு உருவாகிறது என்பதை அறிய உதவும். இந்த ஆராய்ச்சி மின்வேதியியல் பயோ சென்சாரை கண்டுபிடிக்க வழிவகுத்தது.

இவ்வகை பயோ சென்சார்கள் நவீன வகையை சார்ந்தவை இவை சர்க்கரை வியாதி மற்றும் அதன் தொடர்பான சிக்கல்களை கண்டறிய உதவும். இதனை தொடர்ந்து இந்த பயோ சென்சாருக்கு காப்புரிமை பெற 2014 விண்ணப்பித்தது இம்மாத ஆரம்பத்தில் இதற்கான காப்புரிமையை கிடைத்துள்ளது. இதனிடையில் இது தொடர்பான மருத்துவ ஆய்வுகள் நடத்துவதற்காக சாஸ்திரா மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்திற்கு (SERB) ஒரு திட்ட வரைகோள் அனுப்பியுள்ளது.

டாக்டர் ஜான் பாஸ்கோ பாலகுரு மற்றும் டாக்டர் வேதாந்தம் ஸ்ரீனிவாசன் இணைந்து 2 ஆண்டுகள் இந்த பயோ சென்சாரின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள்  பலனளிக்கும் வகையில் உள்ளதால் இந்த பயோ சென்சார் இரத்தத்தின் பிளாஸ்மாவில் உள்ள mg அளவை கண்டுபிடிக்கக் கூடிய ஒரு கருவியாக தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *