Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மீன் வளர்ப்பினை செயல்படுத்திடவும், விரிவுபடுத்திடவும் மானியம் – திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பினை 
விரிவுபடுத்திட மானியம் வழங்கும் திட்டம் (Subsidy assistance for Expansions of Fish Culture) தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை விரிவுபடுத்திடவும், திட்டத்தினை செயல்படுத்திடவும் திருச்சி மாவட்டத்தில் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள 
பயனாளிகள் ஒரு ஹெக்டேரில் ரூ.7.00 இலட்சம் செலவு செய்து மீன்குளம் 
அமைத்திட 50 சதவீதம் மானியமாக ரூ.3.50 இலட்சம் 

ஒரு ஹெக்டேர் நீர்ப்பரப்பில் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினத்திற்கான தொகையான ரூ.1.50 இலட்சத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.60,000- வழங்கப்படுகிறது. மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் 0.25 ஹெக்டேர் முதல் ஒரு ஹெக்டேர் வரை உள்ள நிலப்பரப்பில் மீன்வளர்ப்பு குளம் அமைக்க பயனாளிகள் சொந்த நிலம் அல்லது 7 வருட குத்தகைக்கு பெற்ற நிலம் வைத்திருக்க வேண்டும்.

மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் திருச்சி மற்றும் கரூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, நிலத்தின் வரைபடம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிக 
விண்ணப்பங்கள் பெறப்பட்டால் மூப்புநிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் திருச்சி மற்றும் கரூர் (இருப்பு) திருச்சி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு (தொலைபேசி எண் 
0431 – 2421173) கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *