மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கிசுடும் தளத்தில் நடைப்பெற்றது. திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் அமல்ராஜ் தலைமையில் இன்று 21.08.2021-ம் தேதி துப்பாக்கி சுடும் போட்டி நடைப்பெற்றது.


இந்த போட்டியில் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை தலைவர்கள், காவல்துறை துணை தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இரண்டு வகையான துப்பாக்கியில் போட்டி நடைப்பெற்றது.
பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
 
1. அருண் (திருச்சி மாநகர ஆணையர்)  
  
2. பிரவேஷ்குமார் (தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர்)
 
3. ஜவஹர் (நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)


இன்சாஸ் துப்பாக்கி சுடும்போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
 
1. ஜவஹர் (நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)  
 
2. பிரவேஷ்குமார் (தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர்)
 
3. விஜயகுமார் (திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)
4. நிஷா பார்த்திபன் (புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)
வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் (கமாண்டோ) அமல்ராஜ் வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           146
146                           
 
 
 
 
 
 
 
 

 22 August, 2021
 22 August, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments