தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எதிர்வரும் காந்தி ஜெயந்தி (02.10.2021) அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு ஆதார் பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
மேற்படி முகாமில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழக்கம் போல் புதிய ஆதார் பதிவு, கருவிழி ரேகை பதிவு மற்றும் புகைப்படம் மாற்றம் செய்தல், ஆதார் நிலை அறிதல், பெயர், பிறந்த தேத, முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவை மாற்றம் செய்தல் போன்ற சேவைகள் வழங்கப்படுவதால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் முகாமில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn



            
            
            
            
            
            
            
            
            
            


Comments