குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.

குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் காவல் நிலையம் பின்புறம் மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சுற்றி திரிந்த மலைப்பாம்பு ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் இன்று இரவில் குடியிருப்பு பகுதிக்கு மலைப்பாம்பு வந்தது‌.

இதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பாம்பு குடியிருப்பு அருகே உள்ள புதருக்குள் சென்று மறைந்தது. அப்பகுதியைச் சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் இமாம் உசேன் தலைமையில் இளைஞர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் 10 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பின்னர் மலைப்பாம்பை தீயணைப்துறையினரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் பத்திரமாக பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision