போலி சான்றிதழ் கொடுத்து 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் திருச்சி பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு
திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் முசிறி கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்க கல்வி) ஜோதி மணி நேற்று புகார் மனு அளித்தார். அதில், துறையூர் தாலுகா மதுராபுரியை சேர்ந்தவர் சகாய சுந்தரி (49). இவர் 1997ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி முதல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தற்போது மண்ணச்சநல்லூர் மூவாரம்பாளையம் துவக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆசிரியை சகாயசுந்தரி அளித்த சான்றிதழ்களின் உண்மை தன்மை சமீபத்தில் அறியப்பட்டது. இதில் அவர் அளித்த சான்றிதழ்கள் போலியானது என்பதும், இவர் அளித்த சான்றிதழ்கள் வேறு ஒருவர் பெயரில் இருப்பதும் தெரியவந்தது. எனவே சகாயசுந்தரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சகாய சுந்தரி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழ் கொடுத்து கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக சகாயசுந்தரி பணியாற்றி வந்தது கல்வி அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn