லாரி மோதியதில் அரசு பேருந்து மரத்தில் இடித்து விபத்து - கடும் போக்குவரத்து பாதிப்பு

லாரி மோதியதில் அரசு பேருந்து மரத்தில் இடித்து விபத்து - கடும் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து செவந்த லிங்கபுரம் காலனி அருகில் சென்று கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து எதிரே வந்த கண்டைனர் லாரி அரசு பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் தா.பேட்டை நாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் ( 38) காயம் ஏற்பட்டதால் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்தில் பயணம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். இதில் விபத்துக்கு காரணமாக இருந்த லாரி ஓட்டுனர் கான்பூர் மாநில பலுவயலை சேர்ந்த ராம் சத்யா யாதவ் மகன் அமர்நாத் யாதவ் (44) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision