திருச்சி உறையூரில் தடுப்பூசி போட்டுகொள்ள காலை 6.30க்கே வரதுவங்கிய கூட்டம்

திருச்சி உறையூரில் தடுப்பூசி போட்டுகொள்ள காலை 6.30க்கே வரதுவங்கிய கூட்டம்

திருச்சி உறையூர் எஸ்.எம் பள்ளியில் கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு காலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டுள்ளனர். காலை ஆறு மணிக்கெல்லாம் பொதுமக்கள் எஸ்.எம் பள்ளியின் முன் வந்து நிற்க துவங்கிவிட்டனர். கோவிட் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள பேரயுதமான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பொதுமக்களிடையே மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி குறைந்த அளவு மட்டுமே வருகிறது. மாநகர பகுதிகளில் நாளொன்றுக்கு 3200 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் 400 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பள்ளியின் உள்ளே நிற்கிறார்கள். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து வந்து வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பிற்கு காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஒரே ஒரு எஸ் எம் பள்ளி சாலை முழுவதும் இருசக்கர வாகனங்களாக காட்சியளிக்கிறது .இன்னும் பொதுமக்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 3200 கோவிசீல்டு தடுப்பூசிகள் 4 கோட்டங்களில் 8 இடங்களில் மட்டுமே இன்று போடப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC