வட்டார அளவிலான கலைத் திருவிழா

வட்டார அளவிலான கலைத் திருவிழா

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர்  மு. அன்பழகன் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்து  கீழரண் சாலை மதுரம் மாநகராட்சி பள்ளி மாணவ ,மாணவிகளின் குழு நடனம், பறை  இசை குழுவினர் தப்பாட்ட நிகழ்ச்சி பார்வையிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கி பாராட்டினார்.
        
          தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.  திருச்சிராப்பள்ளி நகரம் வட்டாரத்திற்கு உட்பட்ட 12 அரசு பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்றன. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான போட்டிகள் கீழரன் சாலை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 9,10 மற்றும்11,12 வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் டவுன்ஹால் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் கீழரண் சாலை மாநகராட்சி பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

         இப்போட்டி கவின் கலை, நுண்களை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம், மொழிதிறன் ஆகிய தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.  முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள்  மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவார் இந்த கலை விழாவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்து கீழரண் சாலை மதுரம் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளின் குழு நடனம் பறை  இசை குழுவினர் தப்பாட்ட நிகழ்ச்சி பார்வையிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கி பாராட்டினார். 

           இந்த கலை நிகழ்ச்சியில் வட்டாரகல்வி அலுவலர் திரு.அந்தோணி ஜோசப். திரு.அர்ஜுன் மற்றும் சிராஜிதின் தலைமை ஆசிரியர் மாமன்ற உறுப்பினர்கள். பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

  
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO