குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

திருவெறும்பூர் அருகே திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் ஊழியரை அறிவாளால் வெட்டிய இரண்டு பேரை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஷர்புதீன் இவரது மகன் முகமது உசேன் (35) இவர் திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று தனது வீட்டின் அருகே உள்ள குடிநீர் பைபிள் தனது குழந்தையை வைத்துக்கொண்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அவர்களின் மீது போதையில் மோதுவது போல் இரண்டு பேர் நடந்து வந்து உள்ளனர்.
அவர்களை ஏன் இப்படி வருகிறீர்கள் என முகமது உசேன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களில் ஒருவன் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து முகமது உசேனின் கை மற்றும் தோள்பட்டை ஆகிய இரண்டு இடத்தில் வெட்டி விட்டுதப்பி ஓடிவிட்டனர்.இதில் பலத்த காயமடைந்த முகமது உசேனை அப்பகுதி மக்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சையும் பின்னர் முயற்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision