திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 531 வாக்குச்சாவடிகள் 

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 531 வாக்குச்சாவடிகள் 

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிக்கும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் சிவராசு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை வெளியிட்டார்.

வாக்குச்சாவடிகள் 1500 வாக்காளர்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டது. வாக்குச்சாவடிகள் தொடர்பான பெயர் மாற்றம், முகவரி மாற்றம், இடமாற்றம் மற்றும் கட்டிட மாற்றம் தொடர்பாக முறையீடுகள் ஏதும் இருப்பின் இதுதொடர்பான முறையீடுகளை 25.09 2021க்குள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வரைவு வாக்குச்சாவடி பட்டியலின்படி மணப்பாறை தொகுதியில் 324, ஸ்ரீரங்கம் 339, திருச்சி மேற்கு 271, திருச்சி கிழக்கு 258, திருவரம்பூர் 294, லால்குடி 249, மண்ணச்சநல்லூர் 273, முசிறி 255, துறையூர் (தனி) 268 என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 2531 சாவடிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொரோனா தொற்று காரணமாக ஆண், பெண் வாக்குச்சாவடிகள் என தனித் தனியாக பிரிக்கப்பட்டது.

மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலின் போது திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 392 வாக்குச்சாவடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn