தமிழ்நாடு முதல்வர் சென்ற கான்வாய் சாலையில் லாரி சாய்ந்ததால் பரபரப்பு

தமிழ்நாடு முதல்வர் சென்ற கான்வாய் சாலையில் லாரி சாய்ந்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி இருதயபுரம் பகுதியில் உள்ள நந்தியாவில் 5.9 கிலோமீட்டர் தொலைவில் ரூபாய் 194. 25 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணி நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளது. இப்பணியினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நந்தியாறு வந்தலை கூடலூர் கிராமத்தில் இருந்து புள்ளம்பாடி இருதயபுரம் ரயில் பாதை வரையில் உள்ள நந்தையாறு ஆற்றின் இருபுறமும் இருந்த 120 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை நீர் வளத்துறை அதிகாரிகள் அகற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் உள்ள நந்தியாற்றினை தற்போது தூர்வாரி உள்ளதால் ஆண்டுதோறும் பெய்யும் கனமழையால் வந்தலைக் கூடலூர், புள்ளம்பாடி, இருதயபுரம் ,புஞ்சை சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1500 க்கும் மேற்பட்டோர் விலை நிலங்கள் வெள்ளநீர் சூழ்ந்து விளை பயிர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுவதுடன் 5775 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது என்பது குறிப்பிதக்கது.

இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் எ,ம் எல் ஏ சௌந்தரபாண்டியன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு விட்டு திருச்சி சுற்றுலா மாளிகை வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்னர் திருச்சி விமான நிலையத்துக்கு புறப்பட்டார். சென்னைக்கு புறப்பட்டு செல்ல விமான நிலையத்திற்கு திருச்சி புதுக்கோட்டை சாலையில் முதல்வர் வருகை புரிந்தார். கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணை எதிரே நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி எதிர்ப்பாராத விதமாக பள்ளத்தில் சிக்கி சாய்ந்து நின்றது. முதல்வர் வந்த கான்வாய் சாலையில் லாரி சாய்ந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கான்வாய் சாலையில் நெல் மூட்டையுடன் லாரி சாய்ந்தது காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக முதல்வர் வருகை தரும் கான்வாய் சாலையில் ஏராளமான லாரிகள் நெல் முட்டையுடன் நின்று கொண்டிருந்தன. கான்வாய் சாலையில் போக்குவரத்திற்க்கு இடையூறாக இருக்கும் என்று லாரிகள் அருகில் இருந்த ஒரு தெருவில் உள்ள சாலைக்கு மாற்றி விடப்பட்டன. தெருவில் இருந்து வெளியே வந்த லாரி பள்ளத்தில் சிக்கி சாயந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn