வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு ABVP அஞ்சலி

வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு ABVP அஞ்சலி

சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3ம் தேதி பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 24 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானார்கள். 31 பேர் காயமடைந்தனர்.

இந்த சண்டையில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நக்சலைட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் வீரமரணம் அடைந்த 24 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பினர் அகல் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr