அதிமுக ஒன்று ஒரிஜினல் அதிமுக நாங்கள் தான் - திருச்சியில் ஓபிஎஸ் அணி வைத்திலிங்கம் பேட்டி
திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நாளை மறுநாள் (24.04.2023) ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநாட்டு திடலில் ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கூறுகையில்..... அதிமுக என்ற பெயரில் மாநாடும் அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்தப்படும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தான். அதிமுகவினர் வழக்கு போட்டால் சந்திக்க தயார். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத் தான். நிரந்தரமாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கு இரட்டை இலை கொடுக்கப்படவில்லை.
அதிமுக கொடியில் ஏற்கனவே அண்ணா இரட்டை இலை சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது . நாங்கள் எந்த கொடி சின்னத்தையும் மாற்றவில்லை. சட்ட சிக்கல் ஏற்படும் என்று எங்களுக்கு பயமும் இல்லை .நாங்கள் ஒன்றும் குற்றவாளி இல்லை. சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க நாங்கள் இதை பயன்படுத்த தேவையில்லை என்றார்.
நாளை மறுநாள் 24 ஆம் தேதி நடைபெறும் முப்பெரும் விழா மாநாட்டில் சசிகலா, தினகரன் மேடை ஏறுவார்களா என்ற கேள்விக்கு அதற்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பதில் அளிப்பார் என்று தெரிவித்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அதிமுக ஒன்னு இரண்டு என்று பேசியதற்கு தொடர்பாக கேட்ட கேள்விக்கு அதிமுக ஒன்று ஒரிஜினல் அதிமுக நாங்கள் தான்.
அதிமுக இரண்டு மற்றவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி என பதில் அளித்தார். இதுபோல் பல மாநாடுகளை நடத்துவோம் .கூட்டணி கட்சியினர் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என பேட்டியளித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த. கு.ப.கிருஷ்ணன்..... அ.தி.மு.க கொடியையும், சின்னத்தையும் நாங்கள் பயன்படுத்த கூடாது என எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவரே அறிவித்து கொண்டுள்ளார். காவல்துறை எங்களுக்கு மாநாடு நடத்த நல்ல பாதுகாப்பு வழங்குவார்கள். நாங்களும் அவர்களுக்கு எந்த வித தொந்தரவும் செய்ய மாட்டோம்.
அதிமுக எம்ஜிஆர் ஆல் தொடங்கப்பட்ட கட்சி இரட்டை இலை சின்னம் கொடியும் அவருக்கு உண்டு வந்தது. அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர பல வகைகளில் நாங்கள் உழைத்து உள்ளோம் எங்களுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கும் கிடையாது.