திருச்சி கரூர் சாலையில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்து - மின் விளக்கு அமைத்து தர ஆட்சியரிடம் மனு!

திருச்சி கரூர் சாலையில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்து - மின் விளக்கு அமைத்து தர ஆட்சியரிடம் மனு!

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் தினமும் பல விபத்துகள் நடந்த வண்ணமே இருந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒளி விளக்குகள் இல்லாத காரணத்தால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் குடமுருட்டி  பாலம் முதல் அந்தநல்லுர் வரை சாலை இரு புறமும் உள்ள மின் கம்பங்கள் இடங்களை  மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்கபட்டு பணிகள் நிறைவடைந்து உள்ளது.

மேற்கண்ட சாலையில் குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லுர் வரை சாலை ஓரங்களில் புதியதாக அமைக்கபட்டுள்ள மின் கம்பங்களில் மின் விளக்கு வசதி பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் பல சிரமங்களிடையே வாகன ஓட்டிகள் பயணிக்கும்  சூழ்நிலை உள்ளது. 

Advertisement

எனது விபத்துக்கள் ஏற்படும் முன் தடுக்க வேண்டும் எனவும், சிறப்பு நிதி ஒதுக்கி குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லுர் வரை சாலை ஓரங்களில் புதியதாக அமைக்க பட்டுள்ள மின்கம்பங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் சாலை பயனீட்டாளர்கள் அமைப்பின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாது கரூர் சாலையில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.