மணப்பாறை அருகே 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து- 3 பேர் காயம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வெங்கட்நாயக்கன் பட்டி பிரிவு சாலையில் (திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை) திருச்சியிருந்து - இருந்து மதுரை ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் டயர் வெடித்து தடுப்பு கட்டையை தாண்டி எதிர் திசையில் (திருச்சி) திசையை நோக்கி நின்றது.
தூத்துக்குடியில் இருந்து பன்ருட்டிக்கு முந்திரிகொட்டை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த லாரி தீடீரென எதிர்திசையில் கட்டுப்பாட்டை இழந்து வந்து நின்ற காரைப் பார்த்து லாரியின் வேகத்தை குறைத்ததால் லாரிக்கு பின்புறம் வந்து கொண்டிருந்த சொசுகு கார், அதன் பின் வந்த மினிவேன், அதன் பின் வந்த கார், பின்னால் வந்த ஆம்னி பேருந்து ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை வெங்கட் நாயக்கன்பட்டி பிரிவு ரோடு அருகே சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்த திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை சேர்ந்த அகமது ரசின், சரக்கு மினி வேனில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் அய்யனார் புரத்தை தினேஷ்குமார், இளங்கோ என்பவருக்கு பின்தலையில் காயமும் ஏற்பட்டு மூவரும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி இந்த விபத்தில் ஒன்றன்பின் ஒன்றாக சென்று மோதி விபத்துக்குள்ளான அனைத்து வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தது. விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn