சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு கலர் மற்றும் க்யூ ஆர் கோட் முறையில் அனுமதி சீட்டு? - திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பேட்டி
திருச்சிராப்பள்ளி ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (20.12.2024) கோயில் வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முன்னேற்பாடு பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் செல்வகுமார், திருக்கோவில் இணை ஆணையர் மாரியப்பன், வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன், காவல்துறையினர், வருவாய்த் துறையினர், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள், போக்குவரத்து துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... மாதிருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் பங்கு பெற ஆன்லைன் மூலமாக வா அல்லது நேரடியாகவா அனுமதி சீட்டு வழங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி உற்சவ நாட்களில் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு கலர் மற்றும் க்யூ ஆர் கோட் முறையில் அனுமதி சீட்டு வழங்குவதற்கு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வரும் என்றார். பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறையினர் எண்ணிக்கை அதற்கு ஏற்றார் போல் வழங்கப்படும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision