இயற்கையை காக்கும் ஆலமர வேலுப்பிள்ளை 

இயற்கையை காக்கும் ஆலமர வேலுப்பிள்ளை 

இயற்கையை காக்க நினைக்கும் அனைவரும் இயற்கையின் காதலர்களே. கிட்டத்தட்ட சுமார் 400 மரக்கன்றுகளை நட்டு இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் "ஆலமர வேலுபிள்ளை". 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ளது அளுந்தலைப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேலுப்பிள்ளை. 63 வயதிலும் விவசாயம் செய்து வரும் இவர் இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் தன் வீட்டை சுற்றி ஆல மரம், அரச மரம், அத்தி மரம், வேப்பமரம், புங்க மரம், வில்வ மரம் போன்ற பல மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்.

வேலுப்பிள்ளை தானே நீங்கள் என்றால் கேட்டால் இல்லையில்லை  நான் ஆலமரம் வேலுப்பிள்ளை என்றே கூப்பிடுங்கள் அதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று புன்னகையோடு நம்மோடு பேச தொடங்கினார்  வேலுபிள்ளை.


சாதாரணமாக மரம் வளர்க்கும் முயற்சியாக மரக்கன்றுகளை நட தொடங்கினேன். இதன் மீது ஆர்வம் அதிகரிக்கவே தொடர்ந்து இந்த பணியை செய்ய தொடங்கி விட்டேன். இதற்கு எப்பவுமே உறுதுணையாய் இருப்பது என் மனைவி இளவரசி. அவங்க இல்லாமல் எனக்கு இது சாத்தியமில்லை. என்ன வேலை செய்தாலும், அதுக்கு ஒருத்தர் உறுதுணையாக இருக்கிறார்கள் என்றால் அது வெற்றி.

ஆலமரம் எனக்கு அதிகமா பிடிக்கும். இந்த மரம் மட்டும் தான் ஆயிரம் வருஷத்துக்கு நம்ம தலைமுறை மட்டுமில்லாமல் பல தலைமுறைகளை பாதுகாத்து நிற்கும். அதனால் தான் அதிகமாக ஆல மரங்களை நட்டு வைக்கணும்னு எனக்கு தோணுச்சு. இதில் மிக முக்கிய காரணம் ஆலமரத்தில் அதிகமாக பறவைகள் வந்து கூடுகட்டும். இதனால் பறவைகள் மூலம் மரம்  அதிகமாகின்றது எல்லாருக்கும் தெரிந்தது தான். அதனால் தான் ஆலமரத்து மேல எனக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆலமரத்தை அதிகமா நட்டு வளர்க்க ஆசைப்பட்டேன்.  

எல்லாரும் சும்மா செடியை நட்டு வச்சிட்டு மட்டும் போனா போதாது .அது கிட்டத்தட்ட ஒரு 5 வருஷத்துக்கு அதை பாதுகாத்தால் போதும் அதுக்கு பிறகு தானாக அதுவே வளர்ந்து கொள்ளும். சுமார் 15 வருடமா நான் இந்த மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளேன். ஆனாலும் இன்னும் நிறைய மரம் வளர்கனும் என்ற ஆசை  தொடர்வதால் மரக்கன்றுகளை நடுவதை விடவில்லை . சும்மா சொல்லக்கூடாது வேலுப்பிள்ளைனு சொல்லும் போது இருக்குற சந்தோஷத்தை விட ஆலமரம் வேலுப்பிள்ளைனு சொல்லும் போது உள்ளுக்குள்ள ஒரு விதமான சந்தோஷத்தோடு,  பெருமிதமும் இருக்கு. கடைசி காலம் வரை  இந்த பேருக்கு ஏற்றாற் போல வாழனும் என்றார்.

பறவைகளுக்கு ஒரு சலீம் அலி போல் , ஆலமரங்களுக்கு ஒரு வேலுப்பிள்ளையாய் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தலைமுறைகளை தாண்டி பேர் சொல்லும்  பிள்ளைகளை போல் வளர்க்கும் இவர் மரங்கள் என்பது நிதர்சனம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I