பாம்பு தோலுரிப்பது போன்று மின்கம்பம் ஒன்று தோல் உரிக்கப்பட்டு வருகிறது

பாம்பு தோலுரிப்பது போன்று... மின் கம்பம் ஒன்று தோல் உரிக்கப்பட்டு வருகிறது..
இதனை பார்த்ததுண்டா..
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிகள்ளிக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணிகண்டம் யூனியன் ஆபீஸ் , கந்தசாமி உடையார் தெரு பகுதியில் மின் கம்பங்கள் அதிகளவு சேதம் அடைந்து விழும் தருவாயில் உள்ளது..
அதில் ஒரு மின்கம்பம் கம்பத்தில் உள்ள சிமெண்ட் உதிர்ந்து கம்பி வெளியே தெரியும் நிலை உள்ளது, அதாவது பாம்பு தோல் உரிப்பது போல் மின்கம்பம் முழுவதும் உதிர்ந்து கொட்டி வருகிறது, வருடகணக்கில் இந்த பிரச்சனை இருப்பதாகும் இதனை மின்சார வாரிய அதிகாரியிடம் கூறினால் கண்டும் காணாதது போல் சென்று விடுகிறார்கள், ஒருவேளை உயிர் பலிக்கு பின்பு தான் மாற்றப்படுமா என்ற அச்சத்தில் நாள்தோறும் அந்த பகுதி மக்கள் அந்த மின் கம்பத்தை கடந்து செல்கின்றனர் ...
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision