திருச்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு முக்கியமான இடம்

திருச்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு முக்கியமான இடம்

திருச்சியின் அடையாளமாக இருக்கும் மலைக்கோட்டையின் அருகில் இருக்கும் ஒரு முக்கியமான இடம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மெயின்காட் கேட் (Main Guard Gate) என்று 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்துகள் இயங்கும். நகரப் பேருந்துகள் அனைத்தும் இங்கிருந்துதான் கிளம்பும். அந்த மெயின்காட் கேட் பற்றியும் திருச்சியின் மனிதக்கோட்டை பற்றியும், தெப்பக்குளம் பற்றியும்தான் நாம் பார்க்கப்போகிறோம்.

திருச்சியின் இயற்கையான மலைக்கோட்டைக்கு அருகில் 16ஆம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கர் என்ற மதுரை நாயக்க மன்னாரால் கோட்டையும், தெப்பக்குளமும் உருவாக்கப்பட்டது. அந்த கோட்டையின் மேற்கு வாசல்தான் மெயின்காட் கேட் மதுரை நாய்க்கர்கள் என அழைக்கப்பட்டாலும், இருமுறை அவர்களுக்கு திருச்சி தலைநகரமாக இருந்துள்ளது. அதிலும் ராணி மங்கம்மாள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம், அவர் திருச்சியில் இருந்துதான் ஆட்சி செய்தார்.

அவரது ஆட்சிபீடமான தர்பார் மண்டபம் இன்றைய அருங்காட்ச்சியகம் ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் இது ஆட்சியர் அலுவலகமாக இருந்தது, பின்னர் டவுன் ஹால் எனவும், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகமாகவும் இருந்துள்ளது. இங்கிருந்த காவல்நிலையமும் சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது.

மெல்ல இந்த இடங்களை வரலாற்றுப் பார்வையிடமாக மாற்ற அரசு தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகிறது. நாயக்கர் காலத்தில் 16கி.மீ சுற்றளவுள்ள கோட்டை மலைக்கோட்டையைச் சுற்றி இருந்துள்ளது. இப்போதுள்ள மேல அரண் சாலை, கீழ அரண் சாலை, பட்டர்வர்த் ரோடு (WB Raod, EB Road, Butterworth Road) ஆகியவை 12 அடி அகழியாக இருந்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா?

நாயக்கர் காலத்திற்கு பிறகு சந்தாசாகிப் என்ற ஆற்காடு நவாப் இங்கு ஆட்சி செய்தார். அவரது காலத்திலும் அதற்கு பிறகு ஆங்கிலேயர் காலத்திலும் திருச்சி பல போர்களை சந்த்திதுள்ளது. அக்காலத்தில் முக்கிய காவலர்கள் நிறுத்தப்பட்ட வாயில்தான் மெயின்காட் கேட், தெப்பக்குளத்திற்கு செல்லும் நுழைவாயிலாக இன்றும் இருக்கும் கோட்டை வாசல்தான் இது. இன்று இந்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் புதியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தொல்லியல் திருச்சி வட்ட அலுவலகம் இங்குதான்உள்ளது.

பல்வேறு போர்களில் தாக்கப்பட்ட திருச்சி கோட்டையில் பல பகுதிகள் மீதம் இருந்தது. 1868ல் நகரவளர்ச்சிக்காக பலபகுதிகளை இடித்து அகழியில் போட்டு மூடி சாலை அமைத்தர் அன்றைய மாவட்ட ஆட்சியர் பட்டர்வர்த், அவர் பெயராலேயே ஒரு சாலையும் இன்றும் உள்ளது, திருச்சிக் கோட்டையின் மீதமிருந்த இடங்களை இடிக்க 12 ஆண்டுகள் ஆனதாம்.

திருச்சியின் மலைக்கோட்டைக்கு அருகில் இருந்த மன்னர்கால இரு பெரும் கோட்டைகள், அரண்மனை, அரசு அலுவலகம் ஆகிய அனைத்துக்கும் முக்கிய வாயிலாக இருந்து காவலர்கள் காவல் காத்த மெயின்காட்கேட் வழியாக தெப்பக்குளத்திற்கு செல்லும்போது திருச்சியின் வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டு நகருங்கள்...

தொகுப்பாளர் - தமிழூர், கபிலன்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision