திருச்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் மரம் வளர்க்கும் நூதன திட்டம்?

திருச்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் மரம் வளர்க்கும் நூதன திட்டம்?

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக மாநகராட்சியின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டமும் செயல்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது.

Advertisement

இந்நிலையில் திருச்சியில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வரும் சூழ்நிலையில் திருச்சி - கரூர் சாலை கோஹினூர் தியேட்டர் அருகே சுமார் 10 அடி ஆழமுள்ள பாதாள சாக்கடை சாலையின் நடுவே செல்கிறது. இங்கு பராமரிப்பில்லாமல் மேற்புற மூடி திறந்ததால் நேற்று இதில் இளைஞர் ஒருவர் சிக்கி மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்றும் பாதாள சாக்கடையில் மூடாமல் மரத்தினை கொண்டுபோய் அவ்விடத்தில் வைத்துள்ளனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் திறந்துள்ள பாதாள சாக்கடையில் மூட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

மேலும் மாநகரின் முக்கியமான இடத்தில் பாதாள சாக்கடை திறந்து கிடப்பதால் சரியாக மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS