பேனரை அப்புறப்படுத்த முயன்ற போலீஸ்காரர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம்

பேனரை அப்புறப்படுத்த முயன்ற போலீஸ்காரர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நாகம்மையார் தெரு உள்ளது. அங்கு உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த திருவிழாவை முன்னிட்டு சாலையில் உரிய அனுமதி இன்றி அப்பகுதி இளைஞர்கள் பேனர் வைத்துள்ளனர். உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை லால்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் இருவர் அப்புறப்படுத்த முயன்றனர்.

அப்பொழுது அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது ஒரு இளைஞர் காவலர்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் அந்த இளைஞரை சட்டையை கோர்த்து காவல் நிலையத்திற்கு வா எனக் கூறி இழுத்துச் சென்றுள்ளார்.

மேலும் தான் ஏதும் பேசவில்லை எதற்காக தன்னை எழுத்து செல்கிறீர்கள் என இளைஞரும் அப்பகுதியினரும் திரண்டு கேள்வி எழுப்பிய பின்னர் அந்த இளைஞரை அங்கேயே விட்டுவிட்டு காவலர்கள் இருவரும் சென்று விட்டனர். காவலர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த தள்ளுமுள்ளு சம்பவம் அங்கிருந்த ஒருவரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision