பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

ஒடிசாவில் இருந்து திருச்சி நோக்கி கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருச்சி மாவட்டம் சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான தசரதன் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் பிரபாகரன் தலைமை காவலர் ஹேமா மனோ போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் ஈச்சர் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வாகனத்தை மறித்து போலீசார் சோதனை செய்தனர். இச்சோதனையில் ஈச்சர் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா மற்றம் கஞ்சா ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து வாகன ஓட்டுநரை கைது செய்து சமயபுரம் காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ஈச்சர் வாகனத்தை ஓட்டி வந்தவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பச்சைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (34) என்பது தெரியவந்தது. இந்நிலையில் சுரேஷ் கஞ்சா கடத்து வதற்கு முதலில் கார் லாரி போன்ற வாகனங்களை திருடி அதன்பின் கஞ்சாவை ஏற்றி கொண்டு பின் இரண்டு பொருட்களையும் விற்பனை செய்து விடுவதாக விசாரணையில் சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து சுரேஷ் மீது திருட்டு, கஞ்சா மற்றம் ஸ்பிரிட் கடத்தல் போன்ற குற்றங்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளது என தெரியவருகிறது. அதனை தொடர்ந்து சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி மத்திய சிறைச்சாலை அடைத் தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision