புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார்

புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார்

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அவரது தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பாப்பா குறிச்சி பகுதிக்கு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய நகர பேருந்து வழித்தடத்தில் சத்திரம் பேருந்து நிலையம் முதல் பாப்பாகுறிச்சி வழி அரியமங்கலம் காட்டூர் வரை தினசரி 4 நடைகள் இயக்கப்படும் புதிய பேருந்திணை கொடியசைத்து துவக்கி வைத்தார். கார்ட்டூர் பெரியார் சிலை அருகில் பாப்பா குறிச்சி பகுதிக்கு புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,.... நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். அதேசமயம் அத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து பயிற்சி வழங்கி வருகிறோம். நீட் தேர்வு ஜீலை 17 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கும் போது கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இருந்த போதும் நீட் தேர்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு சார்பில் தேர்விற்கான நீட் பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட போராட்டத்தையும் முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு, திருச்சி மாநகர துணை மேயர் திவ்யா, கோட்டத் தலைவர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், பகுதி கழக செயலாளர் நீலமேகம் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO