சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சையில் மிகச்சிறந்த செயல்பாட்டிற்காக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு விருது

சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சையில் மிகச்சிறந்த செயல்பாட்டிற்காக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு விருது

திருச்சி காவேரி மருத்துவமனை தமிழ்நாடு மாநிலத்தின் உறுப்பு மாற்று சிகிச்சை அதிகார அமைப்பிடமிருந்து (டிரான்ஸ்டான் - TRANSTAN) பாராட்டு விருதைப் பெற்றிருக்கிறது. 2020-21 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும், உயிரிழந்தவர்களிடமிருந்து பெறப்படுகின்ற சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சையில் மிகச்சிறந்த செயல்பாட்டிற்காக தென்னூரில் அமைந்துள்ள காவேரி சிறுநீரக சிகிச்சை மையத்தின், குழுவினருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், தலைமை வகித்தார்.  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் . உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர்  மா. சுப்ரமணியம் பேசுகையில்... "உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்தியாவில் முதன்மையான மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. எனினும், இந்த பெருந்தொற்று காலத்தின் போது உறுப்புதானம் வழங்குவதிலும், உறுப்புமாற்று சிகிச்சைகள் செய்வதிலும் சற்று தொய்வு காணப்பட்டது. இப்போது படிப்படியாக, இந்த உறுப்புமாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவது அதிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். சரியான உட்கட்டமைப்பு வசதி மற்றும் மருத்துவ நிபுணத்துவத்துடன் இத்தகைய உறுப்புமாற்று சிகிச்சைகளை மேற்கொள்வதில் தனியார் துறையைச் சேர்ந்த மருத்துவமனைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

உறுப்புமாற்று சிகிச்சையில் தொடர்ச்சியான சிறப்பான பங்களிப்பை செய்து வருவதற்காக காவேரி மருத்துவமனையை நான் மனமார பாராட்டுகிறேன். உறுப்புதானம் செய்வது மீதும் மற்றும் அதன் பலன்கள் மீதும் விழிப்புணர்வை உருவாக்குவதை தொடர்ந்து தீவிரமாக செய்யுமாறு சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். தென்னூரில் உள்ள காவேரி மருத்துவமனையின் பெசிலிட்டி இயக்குனர் அன்புச்செழியன், இவ்விருதைப் பெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துப் பேசுகையில், தமிழ்நாடு அரசிடமிருந்து இந்த பாராட்டு விருதைப் பெறுவது எங்களுக்கு மகிழ்ச்சியும், பெருமையையும் அளிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகள் காலஅளவில் ஏறக்குறைய 540 சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைகளை எமது மையம் வெற்றிகரமாக செய்திருக்கிறது. உயிருள்ள நபர்களிடமிருந்தும் மற்றும்
உயிரிழந்தவர்களிடமிருந்தும் பெறப்பட்ட சிறுநீரகங்கள் இதில் உள்ளடங்கும். மிக நவீன உட்கட்டமைப்பு வசதி, உயர்திறன் கொண்ட அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குழு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் எமது மையம், தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்து வருகின்ற மக்களுக்கும் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைகளை திறம்பட வழங்கி வருகிறது" என்று கூறினார்.

சிறுநீரசுப் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர், எஸ், செந்தில்குமார். டாக்டர், எஸ் சசிகுமார் மற்றும் சிறுநீரகவியல் மருத்துவர்கள் டாக்டர், G. பாலாஜி மற்றும் டாக்டர் வேல் அரவிந்த் ஆகியோரை சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை குழுவாய் பணியாற்றுகிறார்கள். கோவிட் - 19 தொற்றால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ஆண்டான 2020-21-ல் சுமார் 98 சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைகளை (உயிரிழந்தவர்கள் மற்றும் உயிரோடு திருப்பவர்களிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட உறுப்புமாற்று சிகிச்சைக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு செய்திருக்கிறது.

அவர்களது குழுவினரோடு சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சை மீதான விழிப்புணர்வு கடந்த பல ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. சிகிச்சைகள் மற்றும் மருந்துகளில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றம், இந்த உறுப்புமாற்று சிகிச்சைகளை அதிக பயனளிப்பதாக மாற்றியிருக்கின்றன. 2020 - 21 கால அளவின் போது, எமது மையத்திலுள்ள சிறுநீரசு உறுப்புமாற்று சிகிச்சைக் குழுவினர். ஏறக்குறைய 98 உறுப்புமாற்று சிகிச்னசகளை செய்திருக்கின்றனர். ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் கோவிட் பெருந்தொற்று பரவல் காலத்தின் போது மிக அதிக எண்ணிக்கையில் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைகளை செய்த முதன்மையான சில மையங்களுள் எமது மையமும் (காவேரி கிட்னி சென்டர்) ஒன்றாகும். 

தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களிடமிருந்து பெறப்படும் சிறுநீரசு உறுப்புமாற்று செயவ்பாட்டில் மிக நேர்த்தியான பணியை செய்து வரும் டிரான்ஸ்டன் (தமிழ்நாட்டின் உறுப்பு மாற்று அதிகார அமைப்பு). இந்தியாவில் உயிரிழந்தவரிடமிருந்து பெறப்படும் உறுப்புமாற்று சிகிச்சையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை இடம்பெறச் செய்திருக்கிறது. எங்கள்  சேவையை இவ்விருதின் மூலம் அங்கீகரித்ததற்கு டிரான்ஸ்டன் அமைப்பிற்கு மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தென்னூரிலுள்ள காவேரி மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் டாக்டர். T. ராஜராஜன் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn