VDart நிறுவனம் நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற வேலை இல்லை வேலைக்கேற்ற ஊதியம் இல்லை என கல்லூரி படித்து முடித்தார் அவர்கள் கூறும் வாசகம். இந்நிலையில் ஆர்வமுள்ள, திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது அரிது. மேலும் ஐடி நிறுவனம், வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும் என்ற சிந்தனையில் தான் கல்லூரியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் VDart நிறுவனம் சார்பில் கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்களின் திறமைக்கேற்ப வேலை வாய்ப்புகளை அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைகழகம், தேசிய கல்லூரி, தனலெட்சமி சீனிவாசன் கல்லூரி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, ஜோசப் கல்லூரி, MAM பொறியியல் கல்லூரி, நேரு நினைவு கல்லூரி, இந்திரா காந்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி,
பிஷப் ஹீபர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஹோலிகிராஸ் மகளிர் கல்லூரி, கொங்குநாடு பொறியியல் கல்லூரி, கே.ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கேர் கல்லூரி, TRP பொறியியல் கல்லூரி, காவேரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 17 கல்லூரிகளை சேர்ந்த வேலைவாய்ப்பு அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. VDart நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை உதவி பொது மேலாளர் மோகனசுந்தரம் தலைமையிலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இப்ராஹிம் ஆகியோர்
இந்த வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில்.. மாணவர்களின் திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது இது பற்றி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தெரிந்து வைத்திருப்பது குறைவு. இதன் காரணமாக அனைத்து கல்லூரிகளுடன் VDart நிறுவனம் இணைந்து வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்பு மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல். திருச்சி வசிக்கும் மாணவர்களுக்கு திருச்சியிலேயே வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருதல்.
திறமையான மாணவர்களை கண்டறிந்து அவகளுக்கான வேலை வாய்ப்பை அளித்தல் போன்றவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் VDart நிறுவனத்தில் திறமையான கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn