பாஜக நிர்வாகி கொலை - திருச்சி நீதிமன்றத்தில் 7 வாலிபர்கள் சரண்
பாண்டிச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக செந்தில்குமரன் இருந்தவர்.
பாஜக பிரமுகரான செந்தில் குமரன் வில்லியனூர் பகுதியில் தனது வீட்டுக்கு அருகே பேக்கரி கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது நேற்று இரவு 7 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசி, கத்தியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செந்தில் குமரன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் இரவு நேரத்தில் அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொலையில் தொடர்புடைய புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (43), புதுச்சேரி கொம்பாக்கம் சிவசங்கர் (23), புதுச்சேரி கோர்கார்ட் பகுதியைச் சேர்ந்த ராஜா (23), புதுச்சேரி தனத்து மேடு வெங்கடேஷ் (25),கடலூர் கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த பிரதாப் (24), புதுச்சேரி கோர்கார்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (23),
புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) ஆகிய 7 வாலிபர்கள் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 3 நீதிபதி பாலாஜி முன்பு சரணடைந்தனர். இவர்களை விசாரித்த நீதிபதி ஏழு பேரையும் இம்மாதம் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உஉத்தரவிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn