திருச்சியில் பஃப்க்கு எதிர்ப்பு பாஜக போராட்டம் - முதல்வரை ஆபாச பேச்சு 9 பேர் கைது
திருச்சி புத்தூர் நால் ரோட்டில் புதிதாக உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மதுபான கேளிக்கை நடனத்திற்கு அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசையும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும், ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடினர். அப்போது அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதற்கிடையே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆபாசமாக பேசிய பிஜேபி கட்சியினர் மீது நடவடிக்கை வலியுறுத்தி திமுக கட்சியினர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து பிஜேபி நிர்வாகிகளை கைது செய்து நடவடிக்கை வலியுறுத்தி அரசு மருத்துவமனை எதிரில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழக முதலமைச்சரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பாஜக உறுப்பினர் லெட்சுமி நாராயணன், பாஜக திருச்சி மாவட்டத் தலைவர் ராஜசேகரன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம், ரமேஷ், ஹரி, நாகேந்திரன், பரஞ்சோதி, காளீஸ்வரன் பரஞ்சோதி ஆகிய 9 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல், ஆபாச வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO