மும்மொழிக் கொள்கைக்காக பாஜக கையெழுத்து இயக்கம்

மும்மொழிக் கொள்கைக்காக பாஜக கையெழுத்து இயக்கம்

முசிறி கைகாட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக .பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இரு மொழிக் கொள்கை தங்களுக்கு போதும் ஹிந்தி திணிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம் என தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையில் ஹிந்தி மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் ஆதரவு உள்ளது என்பதை பாரதிய ஜனதா கட்சி நிரூபிக்கும் விதமாக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக முசிறி கைகாட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் முசிறி நகர மண்டல் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் வழக்கறிஞர் அணி நிர்வாகி திருமலை ராஜன் உள்ளிட்ட பலர் முன்னிலையில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் மங்கள கௌரி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

அப்போது பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் பொதுமக்களும் கையெழுத்து போட்டனர்.நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை டெலகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision