ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவிலில் “பாலா லையம்”விழா:
ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கர் கோயில் ஏறக்குறைய பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலயமாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது.திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகளும் மிகக் கொடிய மிருகங்களும் வாழ்ந்த இடமாக இருந்து வந்தது. இந்நிலையில்தான் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து விவசாயத்தைப் பாழ்படுத்தி சென்றனர்.
யானைகளின் தொல்லை குறைய காட்டில் நரசிம்மர் கோவில் அமைக்கப்பட்டது. இதனால் இக்கோயிலுக்கு காட்டழகிய சிங்கர் கோயில் எனப் பெயர் பெற்றது.
இந்நிலையில்தான் இன்று திருச்சி திருவரங்கத்தில் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான காட்டழகிய சிங்கர் கோயிலின் …” மஹாசம்ரோசணம்” வருகிற 01.12.19 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு ….. இன்று விகாரி வருடம் கார்த்திகை மாதம் 2-ம் நாள் 18. 11 .19 திங்கட்கிழமை சஷ்டி திதி பூச நட்சத்திரத்தில் சித்தயோகம் கூடிய சுப தினத்தில் காலை 9 .15- 10.00 மணிக்குள் “பாலா லையம்” நடைபெற்றது .
இதில் பக்தர்களும் , பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர் .