காக்கிகளை வலைக்கும் வளையல் கும்பல் - திட்டமிட்ட ஆடியோ கசிவு

காக்கிகளை வலைக்கும் வளையல் கும்பல் - திட்டமிட்ட ஆடியோ கசிவு

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சில்மிஷம் செய்ததாக சென்னையை சேர்ந்த 27 வயதுடைய இளம் பெண் கிரிஜா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். இவர் திருச்சி பாலக்கரை பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் புகார் ஒன்றின் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றதாகவும், அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுகுமார் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து தன்னுடைய கைபேசி எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பி பேசி வந்ததாகவும், இது தொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தன்னை சிலர் மிரட்டுவதாகவும், தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது.... தன்மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதாகவும், அப்பெண்தான் தன்னிடம் தவறாக பேசியதாகவும் தெரிவித்தார். மேலும் இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை தொடங்கியது. இதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஏற்கனவே அந்த பெண் வேறொரு புகார் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் சந்தித்து கொடுத்துள்ளார். அப்பொழுது அதை விசாரித்த ஆணையர், இந்த பெண் கொடுத்த புகார் பொய் புகார் என கண்டுபிடித்து எச்சரித்து அனுப்பி உள்ளார். மேலும் தற்பொழுது பச்சை குத்திய விவகாரம் இவரும் இவருடைய தோழியும் பேசிய ஆடியோ விவகாரம் வெளியாகி உள்ளது. 

திட்டமிட்டு திருச்சி மாநகரில் பணியாற்றும் முக்கிய காவல் ஆய்வாளர்களை வசிய பேச்சால் வளைத்து வம்பில் மாட்டி விட்டு பணம் பறிக்கும் கும்பல் என்று தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஆய்வாளரின் மனைவி நேரடியாக இந்த குறுஞ்செய்தி வந்த முதல் நாளிலிருந்து காவல் ஆணையரிடம் புகார் கொடுத்து விசாரணை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். 

இது தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சைபர் கிரைமில் யார் இதில் தவறு செய்தார்கள் என்பதை ஆதாரங்களை திரட்டி வெட்ட வெளிச்சமாக உயர் அதிகாரிகளுக்கு ஆதாரங்களை கொடுத்துள்ளார். அதிலும் ஆய்வாளர் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அன்றே இவர் மீது தவறு இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். தற்பொழுது இப்பெண் மேலும் பொய் புகாரை வலுப்படுத்த இன்று ஆட்சியரை சந்தித்து செய்திகளில் வெளிவந்ததால் மீண்டும் விசாரணை துவக்கப்பட்டுள்ளது. ஆதலால் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு அளித்த அந்தப் பெண்ணுக்கு உதவியாக சில அதிகாரிகளும் பொறுப்பில் உள்ளவர்கள் அந்தப் பெண்ணிற்கு பின்புறமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இது பற்றியும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn