வங்கி ஊழியர் பலி - வயலூர் செல்லும் சாலை மரண சாலையாக மாறியதா? பொதுமக்கள் ஆத்திரம்
திருச்சி வயலூர் ரோடு சாலையில் உயர் கொண்டான் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வங்கி ஊழியர் லாரி சக்கரம் தலை மேல் ஏறி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அந்த சாலையில் தொடர்ந்து பாதாள சாக்கடைக்கு வெட்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் ஆங்காங்கே உள்ளது. தொடர்ந்து அந்த சாலையில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் முக்கிய கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் அந்த சாலையை பயன்படுத்த வேண்டி உள்ளது.
இந்த நிலையில் பல மாதங்களாக அந்த சாலை மிகவும் மோசமாக பயணிக்க முடியாத நிலையில் உள்ளதால் தினமும் விபத்துகள் அதிகரித்துக் கொண்டு உள்ளது. இந்நிலையில் நேற்று (28.09.2023) இந்த சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் கல்லூரி வாகனம் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.
வயலூரிலிருந்து சாஸ்திரா பல்கலைக்கழகம் நோக்கி செல்லும் கல்லூரி வாகனம் கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது அக்கல்லூரி பேருந்து பள்ளத்தில் சிக்கியது. உடனடியாக கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சரிவர மூடப்படாத பாதாள சாக்கடை பள்ளத்தினால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து சிரமங்களை வருகின்றனர். தொடர்ந்து இந்த சாலைகளில் தினமும் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுவதும் சிலர் விபத்தில் மரணம் அடைவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் அனைவரும் மரண சாலையாக மாறி உள்ளதாக கூறி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn