திருச்சி மாநகரில் அரசியல் கட்சியினரின் பேனர், போஸ்டர்கள் அகற்றும் பணி

திருச்சி மாநகரில் அரசியல் கட்சியினரின் பேனர், போஸ்டர்கள் அகற்றும் பணி

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ம்தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தது.

கட்சி கொடி கம்பங்கள் அகற்றவும், கட்சியினர் விளம்பரம் மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக செயல்படுவதை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டது. அதேநேரம் திருச்சி மாவட்டத்தில் கட்சியினரின் விளம்பரங்கள் மற்றும் பேணர்கள், சுவரொட்டிகள் அழிக்கும் பணி இன்று தொடங்கியது.

திருச்சி உறையூர், சத்திரம் பேருந்துநிலையம் மற்றும் தில்லைநகர் பகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளையும், பேனர்களையும் அகற்றும் பணியில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn