திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவனுக்கு சிறந்த தன்னார்வலர் விருது

Dec 31, 2021 - 01:33
Dec 31, 2021 - 03:33
 1348
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவனுக்கு சிறந்த தன்னார்வலர் விருது

பல்கலைகழக அளவில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் வழங்கும் விழாவில் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவனுக்கு சிறந்த தன்னார்வலர்கள் விருது கிடைத்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் நாட்டுநலப்பணி திட்ட பணியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மற்றும் அலுவலர்களை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.

2020 - 2021ஆம் கல்வியாண்டிற்கான நாட்டு நலப்பணி திட்டத்துக்கான விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் 2021 ஆண்டுக்கான சிறந்த தன்னார்வலருக்கான விருதை

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப துறை மாணவன் ரத்தினகுமாருக்கு கிடைத்துள்ளது. இவ்விருதினை அவருடைய தந்தை ஆதிநாராயணன் பெற்றுக் கொண்டார். விருது பெற்ற மாணவனை கல்லூரி நிர்வாகம் பாராட்டியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn